வண்டிமலைச்சியம்மன் கோவில் சித்திரை திரு

Start Date : 07 May, 2013 (Tuesday) 9:18 am

End Date : 26 May, 2013 (Sunday) 12:19 pm

Email : rajibharathi@hotmail.com

Description

கடலையூர் வடக்குத்தெரு செங்குந்தர் குல (நெசவு) தொழில் தெய்வமாகிய அருள்மிகு தேவி வண்டிமலைச்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா வழக்கம் போல் 07.05.2013 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது. அதன் தொகுப்பை இங்கு காண்போம். பொதுவாக முன்பு ஒவ்வொரு வருடமும் பங்குணி கடைசி செவ்வாய் அன்று கொண்டாடப்பட்ட இத்திருவிழா அதில் கலந்து கொள்ளும் பெருவாரியான மக்கள் இன்றய காலக்கட்டத்தில் சென்னைப்பெருநகரில் வசிப்பதால் அவர் தம் குழந்தைகள் பள்ளி (கோடை)விடுமுறையை கருத்தில்கொன்டு இன்றய காலத்தில் சித்திரை கடைசி செவ்வாய் அன்று கொன்டாடப்படுகிறது. முன்னதாக முந்தய வார செவ்வாய் அன்று அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்த்தப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு வீட்டிலும் தானியம் சேகரிக்கப்பட்டு மொத்தம் சேர்த்து தானிய கஞ்சி தயார் செய்யப்பட்டு, பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. கொடை விழாவிற்கு முன்னதாக முளைப்பாறி எடுத்தல் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. அதாவது கொடைக்கு சில நாட்கள் முன்னதாக முளைப்பாறி எடுப்பதற்கு விருப்பமுள்ள(பெண்) பக்தர்கள் என்று பிரத்தியோகமாக செய்யப்ப்பட்ட மண் தொட்டிகளில் மண் நிறப்பப்பெற்று தானியங்கள் மற்றும் பயறு வகை விதைகள் அதில் தூவப்பட்டு தேவையான நீர் தெளிக்கப்பட்டு இருட்டறையில் வைக்கப்பட்டு புனிதமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இறுதி நாளான கொடை நாளான்று அம்முளைப்பாறிகள் பூஜை செய்யப்பட்டு, அதை சுற்றி கும்மியடித்தல் மற்றும் கும்மிபாடுதல் நிகழ்த்தப்படுகிறது.இறுதியாக கொடை விழாவின் மறு நாள் மஞ்சள் நீராட்டு விழா அன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள நீர்நிலை(நீராவி)யில் கரைக்கப்படுகிறது.இத்தகைய முலைப்பாறி விழாக்கள் பொதுவாக வரும் வேளாண் வருடத்தில் இயற்கை பொய்ப்பின்றி நல்ல மழை பெய்து,நீர்னிலைகள் நிறைந்து, வேளாண் தொழில் சிறப்பாக நடைபெருவதுடன்,மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு,நாடு செழிப்பாக இருக்க கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

Added By : rajibharathi

Post Event Go To Kadalaiyur Page